வெளிநாடொன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து! 13 பேருக்கு நேர்ந்த சோகம்
நேபாளத்தில் பேருந்து ஒன்று கவிழந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 20 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
நேபாளத்தில் உள்ள கவ்ரேபலன்சோக் மாவட்டத்தில் மதம் சார்ந்த விழாவிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பேருந்து ஒன்று, மாலை 6.30 மணியளவில் சாலையில் விபத்திற்குள்ளானது.
இந்த பேருந்தில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Nepal | At least 13 dead in a road accident in Kavrepalanchok district of central Nepal
— ANI (@ANI) December 13, 2022
"The bus carrying revellers from a religious ceremony met with an accident at around 6.30 PM (Local Time). 20 people were injured & taken to hospital," Kavrepalanchok SP told ANI pic.twitter.com/soGr5Rxvb6
மேலும் 20 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து கவ்ரேபலன்சோக் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.