தென் கொரியாவில் குற்ற செயலில் இலங்கையர்கள் குழு; அதிரடியாக கைது
தென் கொரியாவில், இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலங்கையர்கள் குழுவினர், கஞ்சா பயன்படுத்தி ஹாஷிஷ் போதைப்பொருளை தயாரித்து தென் கொரியாவில் விற்பனை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அஞ்சல் மூலம் அதிக செறிவுள்ள கஞ்சாவைக் கடத்தி, உள்நாட்டில் விநியோகிக்க முயன்ற இரண்டு இலங்கை நாட்டினர் சுங்கத்துறையினரால் பிடிபட்டனர்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 30 வயதுகளில் உள்ள இலங்கையரான 'ஏ' மற்றும் 'பி' ஆகியோரை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக புசான் பிராந்திய சுங்க சேவை 14ஆம் தேதி அறிவித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அந்த தகவல்காள் மேலும் தெரிவிக்கின்றன.