வடகொரியாவிடம் இருந்து ஆயுத கொள்வனவா? இலங்கை அரசாங்கம் கூறிய பதில்
இலங்கை அரசாங்கம் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி வடகொரியாவிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்தது என வெளியான தகவல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
நாங்கள் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட டொலரை பயன்படுத்தி வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களை பெற்றோம் - பசில் என்ற தலைப்பில் செய்தி இணையத்தளமொன்றில் வெளியான தகவல் குறித்து தமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அது குறித்து நிதியமைச்சருடன் இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது நிதியமைச்சர் தான் தெரிவித்ததாக வெளியான கருத்துக்களை முற்றாக நிராகரித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.