மகளை காப்பாற்ற முயன்ற தந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
மகளின் உயிரை காப்பாற்ற முயன்று தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் கல்கரியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றே இந்த பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளது.
கலிபோனியாவில் உள்ள கரபாட்டா மாநில கடற்கரையில் குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
39 வயதான யுஜி ஹூஎன்ற கல்கரியைச் சேர்ந்த நபர் தனது ஐந்து வயது மகளை மீட்பதற்காக கடலில் இறங்கியுள்ளார்.

சுமார் 15 முதல் 20 அடி வரையிலான பாரிய அலைகள் குறித்த இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் தாயாரும் கடலில் இறங்கி உதவ முயற்சித்துள்ளார் எனவும், இதன் போது அவரும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறு எனினும் குறித்த தாய் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட குறித்த சிறுமியின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியின் உடல் தேடப்பட்ட போதும் கிடைக்கவில்லை எனவும் பின்னர் ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் உடல் அமைப்பை கொண்ட சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருந்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.