பிரான்ஸ் பாரிஸில் கத்தியுடன் மிரட்டிய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள பரபரப்பான மாண்ட்பர்னாஸ் (Montparnasse) ரயில் நிலையத்தில் கத்தியுடன் மிரட்டிய ஒரு நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் காயமடைந்தார்.
இந்தச் சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது. பாரிஸின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் மாண்ட்பர்னாஸ் ரயில் நிலையமும் ஒன்றாகும் .

அச்சத்தில் உறைந்த பயணிகள்
கையில் கூரிய கத்தியை வைத்திருந்த ஒரு நபர், ரயில் நிலையதில் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துள்ளார்.
அங்கு பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த நபரை எச்சரித்தபோதும், அவர் கட்டுப்பட மறுத்ததால், பொலிஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரது நிலை குறித்து உடனடித் தகவல் இல்லை. பொதுமக்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றிப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, ரயில் நிலையத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.