டொராண்டோவிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரி்ப்பு
2025 ஆம் ஆண்டில் கனடாவின் டொராண்டோ நகரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் திரண்டுள்ளனர்.
சுங்க வரிகள், பணவீக்கம் மற்றும் பரவலான பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும் இவ்வாறு அதிகளவு பயணிகள் திரண்டுள்ளனர்.
Destination Toronto வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் சாதனை எண்ணிக்கையிலான பயணிகள் நகரைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு மொத்தம் 28.2 மில்லியன் பேர் டொராண்டோவை சுற்றுலா தலமாகத் தேர்வு செய்துள்ளனர்.
இதன் மூலம் 9.1 பில்லியன் டாலர் செலவினம் உருவாகியுள்ளது. அதில் 36% அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச சந்தைகளிலிருந்து வந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த சுற்றுலா வருகைகள் நகர பொருளாதாரத்திற்கு சுமார் 13.5 பில்லியன் டாலர் வருவாயை உருவாக்கி, 2024ஐ விட 4% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
2025ல் அதிக வளர்ச்சி கண்ட பகுதி சர்வதேச சுற்றுலாப் பயணிகளாகும். இந்த வருகைகள் 8% உயர்ந்து 1.4 மில்லியன் ஆகிவிட்டன.
குறிப்பாக ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் முறையே 12% மற்றும் 10% உயர்வைக் கண்டுள்ளன.
அதேவேளை, கனடாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள் 25 மில்லியனாக இருந்து, கடந்த ஆண்டைவிட 3% அதிகரித்துள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து வந்த பயணிகள் 2024ஐ விட 6% குறைந்திருந்தாலும், 1.9 மில்லியன் எண்ணிக்கையுடன் இரண்டாவது பெரிய சுற்றுலா பிரிவாக காணப்பட்டுள்ளனர்.