இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு கடும் எதிர்ப்பு; மசோதாவுக்கு சிக்கல்
இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு (Assisted dying) அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பல அரசியலமைப்புச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு அளித்தாலும், மேலவை உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பால் இந்த மசோதா சட்டமாவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

வலுவற்ற மக்களைப் பாதிக்கக்கூடும்
மசோதாவிற்கு ஆதரவளிப்பவர்கள், மேலவையின் தடையை மீற நாடாளுமன்றச் சட்டத்தின் (Parliament Act) கீழ் உள்ள அபூர்வ அதிகாரங்களைப் பயன்படுத்தப் போவதாக எச்சரிக்கின்றனர்.
இந்த மசோதா பாதுகாப்பற்றது என்றும், இது வலுவற்ற நிலையில் உள்ள மக்களைப் பாதிக்கக்கூடும் என்றும் எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு ஒரு சமரசத் தீர்வை எட்ட வேண்டும் அல்லது ஒரு குழுவை அமைத்து ஆராய வேண்டும் என்ற ஆலோசனைகளும் எழுந்துள்ளன.
அதேசமயம் , இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவது ஒரு ஜனநாயகத் தேவையா அல்லது ஆபத்தான முடிவா என்பதே விவாதத்தின் மையமாக உள்ளது.