கல்கரியில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி
கல்கரியில் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்கரியில் நகரில் ஆகஸ்ட் மாதத்தில் வீட்டு விற்பனை கடந்த ஆண்டை விட 8.8 சதவீதம் குறைந்துள்ளது என கல்கரி வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2024-இல் 2,182 வீடுகள் விற்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதே மாதத்தில் 1,989 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.
வீடு விற்பனை தொடர்பிலான புதிய அறிவிப்புகள் 3,478 ஆக இருந்தன, இது கடந்த ஆண்டை விட 1.7 சதவீதம் குறைவாகும். ஆனால் விற்பனைக்கு கிடைக்கக் கூடிய வீடுகள் 48.2 சதவீதம் உயர்ந்து 6,661-க்கு சென்றுள்ளன.
வீட்டு வழங்கல் அதிகரித்திருப்பது சந்தை இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, விலைகள் குறைய வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் CREB தலைமை பொருளாதார நிபுணர் ஆன்-மேரி லூரி தெரிவித்ததாவது, சமீபத்திய விலை குறைவுகள் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட அனைத்து உயர்வுகளையும் சமநிலைப்படுத்தவில்லை.
குறிப்பாக வரிசை வீடுகள் (row houses) மற்றும் அபார்ட்மெண்ட்கள் அதிக வழங்கலால் மிகுந்த விலை சரிவை சந்தித்துள்ளன.
அதேசமயம், தனி மற்றும் பகுதி இணைந்த வீடுகள் சில பகுதிகளில் சிறிய அளவில் விலை உயர்வையும், அதிக வழங்கல் உள்ள பகுதிகளில் விலை சரிவையும் சந்தித்து வருகின்றன.