கனடாவில் ஆசிரியர்களுக்கு அரசாங்கம் பிறப்பித்த உத்தரவு
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் ஆசிரியர்கள் உடன் பணிக்கு திரும்ப வேண்டுமென மாகாண அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 நாட்களாக நீடித்த மாகாணத்தின் வரலாற்றிலேயே நீண்ட கல்வி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர, அல்பர்டா அரசு திங்கள்கிழமை பேக் டு ஸ்கூல் எக்ட் “Back to School Act (Bill 2)” எனும் சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இதில், 50,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சட்ட ரீதியாக மீண்டும் பணிக்கு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம், ஆசிரியர் சங்கமான அல்பர்ட்டா ஆசிரியர் ஒன்றியம் கடந்த செப்டம்பரில் பெரும்பான்மையாக நிராகரித்த ஒப்பந்த நிபந்தனைகளையே சட்டமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டத்தில், பணியை மறுப்பவர்களுக்கு கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.
நிறுவனங்களுக்கு ஒரு நாளுக்கு 500,000 டொலர்களும், தனிநபர்களுக்கு ஒரு நாளுக்கு 500 டொலர்களும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மாகாணம் முழுவதும் 61 பள்ளிக்கூட சபைகளில் வேலைநிறுத்தத்தை தடுக்கும் வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.