ரஷ்யாவுக்கு ஒரு பிடி மண்ணையும் தர முடியாது; உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அதிரடி
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி , ஒரு பிடி மண்னையும் ரஷ்யாவுக்கு தர முடியாது என ஆணைத்தரமாக கூறியுள்ளமை ரஷ்ய - உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை பாதகமாக அமையுமா என்ற் கேள்வியை உலகில் எழுப்பியுள்ளது.
அமைதியை விரும்புவதாகவும், பேச்சுவார்த்தைக்குத் தனது நாடு எந்த வடிவத்திலும் தயாராக இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்துடன் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியான சூழ்நிலையில், ஜெலென்ஸ்கி இவ்வாறு உறுதியாகப் பேசியுள்ளார்.
உக்ரைன் இல்லாமல், தங்களது பிராந்திய ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் எந்தவொரு முடிவும் ‘செத்த தீர்வு’ (Dead Solution) என்றும் அது ஒருபோதும் நிலைக்காது என்றும் அதிபர் ஜெலென்ஸ்கி ஆவேசமாக எச்சரித்துள்ளார்.
உக்ரைனின் அரசியலமைப்புச் சட்டம் கூட நாட்டின் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க அனுமதிக்காது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெலென்ஸ்கியின் இந்த திடீர் ஆக்ரோஷமான நிலைப்பாடு, அமைதி முயற்சிகளுக்கு ஒரு பெரிய திருப்பத்தைக் கொடுத்துள்ளது.
நிலத்தைக் கொடுக்க மாட்டோம் என்ற உக்ரைனின் உறுதியான நிலைக்கும், கைப்பற்றிய பகுதிகளைத் தக்கவைக்க விரும்பும் ரஷ்யாவின் நிலைக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை என்றால், போர் எப்படி முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.