இந்தியாவின் கைப்பாவை ; 50 மடங்கு பதிலடி கொடுப்போம் ;ஆப்கனுக்கு எச்சரிக்கை!
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், ஆப்கானிஸ்தானின் காபூல் நிர்வாகம் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படுவதாகக் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் மீது எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், அதற்கு 50 மடங்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
காபூலில் உள்ளவர்கள் டெல்லியால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள், இந்தியா இன்னொரு போரை தொடங்க ஆப்கானிஸ்தானை பயன்படுத்துகிறது என்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
துருக்கி மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்த மூன்று நாள் அமைதி பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்கு ஆப்கானிஸ்தானே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானுக்கு எதிராக நம்பத்தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையே முட்டுக்கட்டையாக இருந்தது.
அதோடு பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதத்திற்கு காபூல் தான் முழு பொறுப்பு என்று கூறிய ஆசிஃப், பேச்சுவார்த்தை தோல்வியுற்றால் முழு அளவிலான போர் ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுவதாகவும் தெரிவித்தார்.