கனடாவில் காட்டுத்தீயினால் வருடாந்தம் 1400 மரணங்கள்
கனடாவில் காட்டுத் தீயினால் பதிவாகும் மரணங்கள் அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கனடாவில் காட்டு தீ காரணமாக வருடாந்தம் சுமார் 1400 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

புகை மாசடைதல்
குறிப்பாக புகை மாசடைதல் காரணமாகவும் காலநிலை மாற்றம் காரணமாகவும் இந்த மரணங்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. உலகில் சுமார் 100 மருத்துவ நிபுணர்களின் ஆய்வு மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரைவிலான காலப்பகுதியில் காட்டுத் தீ காரணமாக வளி மாசடைதல் சராசரியாக 172 வீதத்தினால் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியுடன் ஒப்பீடு செய்யப்பட்டு இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் கனடியர்கள் சுமார் ஆறு நாட்கள் வரையில் வெப்ப அலைக்கு உட்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக புதைம எரிபொருட்களை பயன்படுத்துவதால் இவ்வாறு காற்று மாசடைகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
காற்று மாசடைதல் மற்றும் வெப்பநிலை காரணமாக கடந்த ஆண்டு கனடாவில் சுமார் 40 மில்லியன் மனித வேலை மணித்தியாலங்கள் விரயம் ஆக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இது சுமார் ஒன்று தசம் நான்கு பில்லியன் அமெரிக்க டாலர் வருமான இழப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் இதனால் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.