வெளிநாட்டில் இந்திய இளைஞனுக்கு அடித்த அதிஸ்டம்; 250 கோடி பரிசு!
அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் அனில்குமார் பொல்லாவுக்கு (வயது29) அதிர்ஷ்ட குலுக்கலில் 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடி) பரிசை வென்றுள்ளார்.
அனில்குமார் பொல்லா தீபாவளி பண்டிகைக்கு 2 நாள் முன்பு அதாவது கடந்த 18-ந் தேதி அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் பங்கேற்றார்.

இதில் அனில்குமார் பொல்லா பதிவிட்ட அனைத்து எண்களும் தேர்வு செய்யப்பட்டு 10 கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.250 கோடி) பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
.அனில்குமார் பொல்லாவின் வீடியோக்கள் சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தான் முதலில் சொகுசு சூப்பர் கார் ஒன்றை வாங்கி பிறகு எழு நட்சத்திர ஓட்டலில் ஒரு மாதம் தங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்த பணத்தை எவ்வாறு புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது என்பதை கவனமாக திட்டமிட நான் நேரம் எடுத்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.
அதேவேளை அமீரகத்தில் இதுவரை இத்தனை பெரிய தொகை யாரும் லாட்டரியில் பரிசாக வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது