கனடாவின் இந்தப் பகுதியில் மீண்டும் பரவும் நோய்த் தொற்று
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃப்ரேசர் பள்ளத்தாக்கு (Fraser Valley) பகுதியில், பறவைக் காய்ச்சல் (Avian Influenza) தொற்றுகள் திடீரென அதிகரித்துள்ளன.
பறவைகளின் இலையுதிர் கால இடம்பெயர்ச்சி தொடங்கியுள்ள நிலையில் நோய் பரவுகை அதிகரித்துள்ளுது.
கடந்த இரண்டு வாரங்களில் அந்தப் பகுதியில் 9 கோழிப்பண்ணைகளில் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என கனடிய உணவு ஆய்வு முகமை வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை, கடந்த ஜனவரி மாதத்திற்குப் பிறகு மாகாணத்தில் உறுதி செய்யப்பட்ட முதல் புதிய பரவல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் தொற்று அக்டோபர் 14 அன்று அபோட்ச்ஃபோர்டு (Abbotsford) பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் கண்டறியப்பட்டது.
அதன் பின்னர் கடந்த வியாழக்கிழமை முதல் மேலும் 8 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதில் 6 தொற்றுகள் சிலிவாக் (Chilliwack) பகுதியிலுள்ள பண்ணைகளில், மீதமுள்ள 3 அபோட்ச்ஃபோர்டில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில ஆண்டுகளில், பறவைக் காய்ச்சல் காரணமாக 8.8 மில்லியனுக்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.