வீட்டை சுத்தம் செய்யாத கணவரின் கழுத்தை அறுத்த இந்திய பெண்; சம்பவத்தால் க்ஷாக்
அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாத கணவரின் கழுத்தை இந்திய பெண் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் வசித்து வந்தவர் அரவிந்த். இவரது மனைவி சந்திர பிரபா (வயது 44). அவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

சுத்தம் செய்யாமல் குப்பை
இந்திய வம்சாவளி தம்பதியான அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வீட்டை சுத்தம் செய்யாமல் குப்பை போல வைத்திருப்பதாக அரவிந்திடம் சந்திர பிரபா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த சந்திர பிரபா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்த அரவிந்த் அலறி துடித்தார்.
தகவலின்பேரில் அங்கு விரைந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் , கணவரின் கழுத்தை அறுத்த சந்திர பிரபாவை போலீசார் கைது செய்து நீதிமன்றில் முன்னைலைப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்