மசாய் மாரா விமான விபத்தில் 11 பேர் பலி ; சம்பவத்தால் அதிர்ச்சி
கென்யாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான மசாய் மாரா தேசிய வனவிலங்கு காப்பகத்திற்கு (Maasai Mara National Reserve) அருகே நடந்த மிக மோசமான விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
விமானத்தில் இருந்த அனைவரும் உடல் சிதறி பலியானதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரிகள் தீவிர விசாரணை
இந்த விபத்து எப்படி நடந்தது, விமானத்தில் சுற்றுலாப் பயணிகளா அல்லது உள்ளூர்வாசிகளா என்பது போன்ற விவரங்கள் குறித்த மர்மம் நீடிக்கிறது.
இந்த திடீர் விபத்துக்கான காரணம் குறித்து கேன்யா விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் வனவிலங்குகள் நிறைந்த பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், சுற்றுலாக் குழுக்கள் மத்தியில் பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.