பக்கவாதத்தால் பாதிப்பு... பரிசுத்தொகையை நன்கொடையாக வழங்க முடிவு செய்த பெண்
கனடாவில் கேம்பிரிட்ஜ் பகுதி பெண் ஒருவர் டாட்டூ போட்டியில் வென்றால், அந்த தொகையை நன்கொடையாக அளிக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் Kristie Taylor என்பவர் 2022ம் ஆண்டு டாட்டு இதழுக்கான அட்டைப்பட போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அவர் வெல்வார் எனில் முதல் பரிசாக 25,000 டொலர் அவருக்கு கிடைக்க வாய்ப்பு.
ஆனால் குறித்த தொகையை தமது சமூக மக்களுக்கு நன்கொடையாக அளிக்க இருப்பதாக அவர் அறிவித்துள்ளார். 2004ம் ஆண்டு கிறிஸ்டி டெய்லருக்கு 12 வயதாக இருக்கும்போது அவரை பக்கவாதம் தாக்கியது.
அதிலிருந்து கடுமையாக போராடி மீண்ட கிறிஸ்டி டெய்லர் தற்போது, அதுபோன்ற நிலையை எதிர்கொள்ளும் மக்களுக்காக தன்னால் இயன்ற பண உதவியை செய்ய இருக்கிறார்.
இதன்பொருட்டு, தற்போது டாட்டு போட்டியில் கலந்துகொண்டுள்ள அவர், அதில் வெற்றி பெற்றால் ஒருபகுதி தொகையை நன்கொடையாக அளிக்க திட்டமிட்டுள்ளார்.