கனடாவில் நிரந்தர வதிவிட உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்
கனடாவில் நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் அந்நாட்டு இராணுவத்தில் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இராணுவப் படைக்கு ஆளணி வளத்தை திரட்டுவதில் பல்வேறு சவால்கள் எதிர்நோக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நிரந்தரமாக வதிவோருக்கும் இராணுவத்தில் இணைந்து சேவையாற்ற அனுமதி வழங்கப்படுகின்றது.
கனேடிய இராணுவப் படை இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நிரந்தர வதிவிட உரிமையாளர்களுக்கு நிபுணத்துவம் வாய்ந்த இராணுவ பணிகளுக்கு மட்டுமே சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்கள், விமானிகள் போன்ற நிபுணத்துவம் வாய்ந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு மட்டும் கனேடிய இராணுவத்தில் இணைந்து சேவையாற்ற அனுமதி வழங்கப்பட்டது.
பயிற்சி செலவுகளை குறைக்கவும் விசேட தேவைகளுக்காகவும் இராணுவம் இந்த வெளிநாட்டுப்பிரஜைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கி வந்தது.
இதேவேளை, றோயல் கனேடிய பொலிஸ் சேவையிலும் 10 ஆண்டுகளாக வதியும் வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸ் சேவையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆளணி வளத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் கனடாவில் வெளிநாட்டுப் பிரஜைகளும் இராணுவ சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.