மனித தோல் செல்களின் வயதை 30 ஆண்டுகள் குறைக்கலாம்; விஞ்ஞானிகளின் சாதனை!
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மனித தோல் செல்களின் வயதை 30 ஆண்டுகள் குறைக்கலாம் என புதிய சாதனைப் படைத்துள்ளது.
நாம் நமது வாழ்க்கைப் பாதையில் முன்னேறும்போது, நமது செல்கள் வயது தொடர்பான மரபணு மாற்றங்களுக்கு உட்படுகின்றன.இதன் விளைவாக அவற்றின் செயல்படும் திறன் குறைகிறது.
ஒரு நபரின் உயிரியல் வயதை தீர்மானிக்க டிஎன்ஏ மெத்திலேஷன் விகிதத்தை அளவிடும் எபிஜெனெடிக் கடிகாரங்கள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கண்காணிக்க முடியும்.
2007 ஆம் ஆண்டில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர் ஷின்யா யமனாகா, முதிர்ந்த செல்களை மீண்டும் ஸ்டெம் செல்களாக மாற்றும் நுட்பத்தை உருவாக்கி, யமனகா காரணிகள் எனப்படும் இரசாயனங்களின் காக்டெய்லுக்கு 50 நாட்களுக்கு வெளிப்படுத்தியபோது இந்தத் துறையில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது.
தற்போது விஞ்ஞானிகள் சோதனை மூலம் மனித தோல்களின் செல்கள் மாற்றத்தை 30 ஆண்டுகளாக குறைக்கும் வழியை கண்டறிந்து உள்ளனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இந்த புதிய சோதனைய நடத்தி உள்ளது.இதன் மூலம் செல்கள் இன்னும் இளமை நிலைக்கு மீட்டெடுக்கிறது.
மனிதர்களுக்கு வயதாக ஆக, செல்கள் சரியாக செயல்படும் திறன் குறைகிறது. இதன் விளைவாக, அவர்கலின் டிஎன்ஏ வரைபடம் வயதான அறிகுறிகளைக் குவிக்கத் தொடங்குகிறது. இதனை 30 ஆண்டுகளாக குறைத்து உள்ளனர்.
மனித தோல் செல்களை 30 ஆண்டுகள் மாற்றம் நிகழாமல் இருக்க ஒரு முறையை உருவாக்கியுள்ளனர், இது செல்கள் அவற்றின் செயல்பாட்டை இழக்காமல் செய்கிறது.
ஆராய்ச்சியாளர்கள் பழைய உயிரணுக்களின் செயல்பாட்டை ஓரளவு மீட்டெடுக்க முடிந்தது, அத்துடன் உயிரியல் வயதைப் புதுப்பிக்கவும் முடிந்தது.
மீளுருவாக்கம் உயிரியலைப் பயன்படுத்தி தூண்டப்பட்ட ஸ்டெம் செல்களை உருவாக்கி, காயங்களைக் குணப்படுத்தும் மற்றும் திசுக்களுக்கு கட்டமைப்பை வழங்கும் கொலாஜன்களை உருவாக்கும் பைப்ரோபிளாஸ்ட்களை உருவாக்குகின்றனர்.
சோதனைகளில், பகுதியளவு புத்துயிர் பெற்ற செல்கள் இளமை செல்களைப் போலவே செயல்படுவதற்கான அறிகுறிகளைக் காட்டி உள்ளன என கூறப்பட்டு உள்ளது.