கடந்த 24 மணித்தியாலத்தில் 4,247பேர் பாதிப்பு; 48பேர் உயிரிழப்பு
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 247பேர் பாதிக்கப்பட்டதுடன் 48பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 13இலட்சத்து 42ஆயிரத்து 388பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்றினால் இதுவரை 25ஆயிரத்து 66பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 61ஆயிரத்து 608பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆயிரத்து 344பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 12இலட்சத்து 55ஆயிரத்து 714பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.