ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில சீஸ் வகைகளுக்கு கனடாவில் தடை
ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில சீஸ் வகைகளுக்கு கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதி பண்டிகைக் காலத்தில் கனடாவின் கடைகளில் சில பிரபல சீஸ் வகைகள் கிடைக்காமல் போக உள்ளன.
ஐரோப்பிய மாடுகளில் பரவியுள்ள லம்பி ஸ்கின் நோய்த் தொற்று காரணமாக இந்த தீாமானம் எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திலிருந்து பதப்படுத்தப்படாத பாலைக் கொண்டு தயாரிக்கப்படும் (raw-milk) சீஸ் இறக்குமதியை கனடாவின் உணவுப் பரிசோதனை அமைப்பு தடை செய்துள்ளது.
இந்த தடை 2025 மே 23க்குப் பிறகு தயாரிக்கப்பட்ட அனைத்து சீஸ் உற்பத்திகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சில பிரபல்யமான சீஸ் வகைகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.