திருடப்படும் கட்டுமான பொருட்களை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பம்
கனடாவில் கட்டுமான பொருட்களை திருடுவோரை கண்டு பிடிப்பதற்கு புதிய தொழில்நுட்பமொன்றை கட்டுமான ஒப்பந்தக்காரர் ஒருவர் அறிமுகம் செய்துள்ளார்.
தமது கட்டுமான தளத்திலிருந்து பெறுமதியான பொருட்கள் அதிகளவில் அடிக்கடி காணாமல் போவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு கட்டுமான பொருட்கள் திருடப்படுவதனை தடுக்கும் நோக்கில் எயர் டெக்குகளை(AirTags) அந்தப் பொருட்களில் பொருத்தி விடுவதாகத் தெரிவிக்கின்றார்.
எயர் டெக்கள் என்பது தொலைந்த பொருட்களை தேடிக் கண்டு பிடிக்க உதவும் சிறிய கருவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கருவிகள் எபள் ஐ போன்கள் மற்றும் ஐபேட்களுடன் இணைக்க முடியும்.
திருடப்பட்ட பொருள் எங்கிருக்கின்றது என்பதனை இந்த எயார் டெக்கள் காட்டிக் கொடுத்துவிடும்.
தமது கட்டுமான தளத்திலிருந்து களவாடப்பட்ட 10000 டொலர்கள் பெறுமதியான கட்டுமான பொருட்களை கண்டு பிடிப்பதற்கு தாம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக கல்கரியைச் சேர்ந்த கட்டுமான ஒப்பந்தக்காரரான பியரே டுமொன்ட் (Pierre Dumont)தெரிவிக்கின்றார்.
[FAVGNC ]
களவாடப்பட்ட பொருட்களை கண்டு பிடித்ததுடன் அது குறித்து தாம் பொலிஸாருக்கு அறிவித்ததாக பியரே தெரிவிக்கின்றார்.