மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிராக கனடா அதிரடி முடிவு!
மியான்மர் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் விதிமுறைகளின் கீழ், கனடா இந்த தடைகளை விதிக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த பெப்ரவரி மாதம், மியான்மர் ராணுவம் அவசரகாலச் சூழ்நிலையில் அதிகாரத்தை கைப்பற்றியதோடு பொதுத்தேர்தலில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டி முக்கிய அரசாங்க அதிகாரிகளை இராணுவம் கைது செய்ததுடன் ராணுவத்தின் கீழ் புதிய ஆட்சியை கொண்டுவந்தது.
இந்நிலையில் கனடா அரசாங்கம், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து அரசாங்கங்களுடன் ஒருங்கிணைந்து கூடுதல் தடைகளை விதிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, கனடா அரசு சார்பில் கூறுகையில்,“மியான்மர் மக்களுடன் கனடா ஒற்றுமையாக நிற்கிறது.இந்த ஆட்சி மனித வாழ்வின் கொடூரமான அலட்சியத்தைத் தொடரும் போது நாம் அமைதியாக இருக்கவும் முடியாது” என தெரிவித்துள்ளது.
மேலும், தனது சொந்த மக்கள் மீதான கொடிய தாக்குதல்களை மியான்மர் ராணுவத்தினர் நிறுத்த சர்வதேச சமூகம் அதிக அழுத்தத்தை பிரயோகிக்குமாறும் கனடா அழைப்பு விடுத்துள்ளது.