2025ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கானோரை நாடுகடத்திய கனடா
கனடா அரசு 2025ஆம் ஆண்டில் 19,000 புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக கனடா எல்லை சேவைகள் ஏஜன்சியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாத எண்ணிக்கையையும் கணக்கில் சேர்த்தால், அந்த எண்ணிக்கை 18,969ஐ தாண்டும் என கருதப்படுகிறது.
2023இல் கனடா 15,207 பேரையும், 2024இல் 17,357 பேரையும் நாடுகடத்தியுள்ளது.
விடயம் என்னவென்றால், கனடாவின் கடுமையான விசா கட்டுப்பாடுகளால், கனடாவுக்கு சட்டப்படி வரும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருகிறது.
அக்டோபர் மாதம் 1ஆம் திகதி நிலவரப்படி, கனடாவின் மக்கள்தொகை 41,575,585 ஆக உள்ளது.
1971ஆம் ஆண்டுக்குப் பின் தற்காலிக குடியிருப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது இப்போதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.