கனேடிய மாகாணங்களில் பரவிவரும் தொற்று: கவனமாக இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்
கனடாவில் ப்ளூ முதலான தொற்றுக்கள் பரவிவரும் நிலையில், தொற்று பரவாமலிருக்கும் வகையில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
கனேடிய மாகாணங்கள் சிலவற்றில் ப்ளூ, respiratory syncytial virus (RSV) முதலான வைரஸ் தொற்றுகள் பரவிவருகின்றன.

குறிப்பாக, ஆல்பர்ட்டா, ஒன்ராறியோ, கியூபெக் மற்றும் நியூ ப்ரன்ஸ்விக் ஆகிய மாகாணங்களில் ப்ளூ காய்ச்சல் அதிகரித்துவருகிறது.
ஆல்பர்ட்டாவில் மட்டும், நவம்பர் மாதம் 29ஆம் திகதி நிலவரப்படி 519 பேர் ப்ளூ காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் 31 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் சோகம் என்னவென்றால், 15 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால, அவர்களை சமாளிக்க மருத்துவமனைகள் திணறிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தடுப்பூசி பெறாதவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் பார்த்துக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்திவருகிறார்கள்.
குறிப்பாக, குழந்தைகள், முதியோர், ஆஸ்துமா ஆகியோருக்கு எளிதில் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், அவர்களுக்கு தொற்று பரவாமல் தவிர்க்கும் வகையில் அவர்களை சந்திப்பதை தவிர்க்குமாறும், கைகளை கழுவுதல், இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டை பயன்படுத்துதல் மற்றும் மாஸ்க் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்திவருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |