அமெரிக்காவுடன் இணக்கத்துக்கு செல்லும் கனடா ; பேச்சுவார்த்தைக்கு தயார்
அமெரிக்கா தயாராக இருந்தால் ஆக்கபூர்வமான வர்த்தக பேச்சு வார்த்தைக்குத் நடத்துவதற்கு தயாராக உள்ளதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா வரிகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய வரிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கனடா ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை வெளியிட்டது.

அந்த விளம்பரத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் வரி விதிப்புகள் வர்த்தக போர்களை உருவாக்கலாம் என்று உரையாற்றிய காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இந்நிலையில் கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தக் கனடா தயாராக இருப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா சென்றுள்ள மார்க் கார்னி கோலாலம்பூரில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார்.