இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்துள்ள கனடா!
இந்திய அதிகாரிகளைக் கனடா அரசு உளவு பார்த்தாக மத்திய அரசு நேற்றைய தினம் புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.
ஓடியோ மற்றும் காணொளி மூலம் கனேடிய அரசாங்கத்தால் இந்திய தூதரக அதிகாரிகள் உளவு பார்க்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கனடா, தங்களின் பாதுகாப்பாகவே அவர்கள் கண்காணிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவை சைபர் எதிரியாகவும் கனடா அறிவித்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள கனடா தேசிய சைபர் அச்சுறுத்தல் மதிப்பீடு 2025-2026 அறிக்கையில்,
தங்கள் நாட்டின் இணைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எதிரி நாடுகளின் பட்டியலில், சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு 5வது நாடாக இந்தியாவின் பெயரை இணைந்துள்ளோம்.
இந்த அறிக்கையானது கனேடிய இணைய பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது.