கனடாவில் இதற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு?

Kamal
Report this article
கனடாவில் ஊழியப்படைக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
கனடாவில் தொழில் தருனர்கள் அனுபவம் இல்லாதவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போதியளவு ஆளணி வளம் இல்லாத காரணத்தினால் இவ்வாறு கல்வி, தொழில் தகுதியற்ற மற்றும் தொழில் அனுபவமற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க தொழில் தருனர்கள் விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அனுபவம் மற்றும் கல்வித்தகமைகள் தொழில் வாய்ப்புக்கு மிக முதன்மையானது என்ற நிலை மாறியுள்ளதாகவும், ஆளணி வளப் பற்றாக்குறையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பணியாளர் ஒருவரின் தொழில் தகமைகளை விடவும் அவரின் குண நலன்களை கருத்திற் கொண்டு நிறுவனங்கள் தொழில் வாய்ப்பு வழங்க முனைப்பு காட்டுவதாக கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 77 வீதமான தொழில் தருனர்கள் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துறைசார் பட்டங்கள் அல்லது சான்றிதழ்கள் இல்லாத புது முகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்க நிறுவனர்கள் ஆயத்தமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.