ரஷ்ய அதிபர் புடினுக்கு நெருக்கமான 10 பேர் மீது கனடா அதிரடி நடவடிக்கை!
ரஷ்ய அதிபரர் விளாதிடிமிர் புடினுக்கு (Vladimir Putin) நெருக்கமான 10 நபர்கள் மீது கனடா புதிய தடைகளை விதிப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.
சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து 12 நாட்களாக போரை நடத்தி வருகின்றது. அபார பலம் கொண்ட ரஷ்யா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது.
ரஷ்யா உக்ரைனை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து தாக்கி, கீவ், கார்கிவ் மற்றும் மரியுபோல் துறைமுகம் உள்ளிட்ட நகரங்களைத் தாக்கியது.
பெப்ரவரி 24 அன்று தொடங்கப்பட்ட இந்த படையெடுப்பு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிக மோசமான அகதிகள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியது மற்றும் ரஷ்யா மீது கடுமையான தடைகளுக்கு வழிவகுத்தது.
இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றைய தினம் (07-03-2022) லண்டனில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனை (Boris Johnson) சந்தித்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை பற்றி கலந்துரையாடினார். அதன் பின் ரஷ்ய அதிபருக்கு நெருக்கமான 10 நபர்கள் மீது கனடா புதிய தடைகளை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
அவர்களில் முன்னாள் மற்றும் தற்போதைய மூத்த ரஷிய அரசாங்க அதிகாரிகள், தன்னலக்குழுக்கள் மற்றும் ரஷ்ய தலைமையின் ஆதரவாளர்கள் உள்ளனர்.
இதுகுறித்து, ஜஸ்டின் ட்ரூடோ லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“நாங்கள் ஒன்றாகச் செய்கிற வேலை, புதினையும் அவருடைய செயல்பாட்டாளர்களையும் மிகவும் புண்படுத்தும் இடத்தில் தண்டிப்பதாகும். இந்த தடைகள் புதினின் உள் வட்டம் உட்பட ரஷ்யாவின் தலைமையின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும், ”என்றார்.