ஈரான் தொடர்பில் கனடாவின் அதிரடி நடவடிக்கை
ஈரானிய இஸ்லாமிய புரட்சி காவல்துறை அமைப்பை தீவிரவாத இயக்கமாக கனடா அறிவித்துள்ளது.
ஓர் அங்கமாக இந்த காவல்துறை படை இயங்கி வருகின்றது.
இவ்வாறான ஒரு பின்னணியில் கனடிய அரசாங்கம் குறித்த காவல்துறையை பிரிவினை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லீபிளாங்க் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
ஈரனிய அரசாங்கம் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை மாற்றிக்கொள்ளும் நிலைப்பாட்டில் இல்லை எனவும் லீபிளாங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ஈரானிய புரட்சி காவல்துறை படையை தடை செய்வது குறித்த யோசனை கனடிய நாடாளுமன்றில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அரசாங்கம் ஈரான் விவகாரத்தில் மெத்தன போக்கை பின்பற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் பின்னணியில் இந்த பயங்கரவாத பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.