கனடாவில் வேலைவாய்ப்பு இழப்பு குறித்து வெளியான தகவல்
கனடாவில் கடந்த ஜூலை மாதம் பொருளாதாரம் சுமார் 41,000 வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. தனியார் துறைகளில் இளைஞர்கள் அதிகளவில் இந்த தொழில் வாய்ப்பு இழப்புக்களை எதிர்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் வாய்ப்புக்களை தேடுவோரின் எண்ணிக்கை ஜூன் மாதத்திலிருந்து சுமார் மாறாத நிலையில் காணப்பட்டதனால் வேலையின்மை விகிதம் 6.9 சதவீதமாக காணப்பட்டது.
கடந்த மாதத்தில் 51,000 முழுநேர வேலை வாய்ப்புக்கள் இழக்கப்பட்டதாகவும் மேலும் இந்த இழப்புகளின் பெரும்பகுதி தனியார் துறையில் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் கடந்த மாதம் வேலை இழப்புக்கள், அதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் பதிவான தொழில் வாய்ப்பு அதிகரிப்பினை ஈடுசெய்யும் வகையில் அமைந்ததினால் பாதிப்பு குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.