அமெரிக்காவில் காட்டில் முகாமிட்டிருந்த கனேடிய சட்டத்தரணிக்கு நேர்ந்த விபரீதம்!
அமெரிக்காவில் காட்டுப் பகுதி ஒன்றில் முகாமிட்டிருந்த கனேடிய சட்டத்தரணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் கியூபெக் மாகாணத்தின் காட்டினேவு பகுதியைச் சேர்ந்த 34 வயதான தோமஸ் பேர்னியர் விலினியோவு என்ற சட்டத்தரணி உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தின் தேசிய பூங்காவொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஒலிம்பிக் தேசிய பூங்கா என்றழைக்கப்படும் இந்த வனப் பகுதியில் முகாமிட்டிருந்த போது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது. குறித்த கனேடிய சட்டத்தரணி இட்டிருந்த முகாமின் மீது மரம் வீழ்ந்துள்ளது.
மிகவும் பின்தங்கிய பகுதியொன்றில் குறித்த நபர் முகாமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரம் முறிந்து வீழ்ந்த பகுதிக்கு வனப் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவம் இடம்பெற்ற மறுதினம் ஹெலிகொப்டர் மூலம் சென்றுள்ளனர்.
மிகவும் சுறுசுறுப்பான இயற்கை நேசிக்கும் நல்ல மனிதர் என இந்த சட்டத்தரணியின் நண்பர்கள் அவரை புகழ்ந்து பாராட்டியுள்ளனர்.
எந்த நேரமும இன்முகத்துடன் அனைவருக்கும் உதவும் மனப்பாங்குடைய நல்ல மனிதர் என மறைந்த சட்டத்தரணிக்கு நண்பர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.