ஹெய்டியில் ஆயுத கும்பல்களை கட்டுப்படுத்த கனடா நிதி உதவி
ஹெய்ட்டியில் ஆயுத கும்பல்களினால் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களை கட்படுத்தும் நோக்கில் கனடா நிதி உதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெய்டியில் அட்டூழியம் புரியும் ஆயுதக் கும்பல்களை கட்டுப்படுத்துவதற்காக, கனடா 60 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது.
இதில் பெரும்பகுதி நிதி, ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதன் ஊடகா வழங்கப்பட உள்ளது.
பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் இணைந்து செயல்பட வேண்டும்,” என கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் ஹெய்டி வெளியுறவு அமைச்சரை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2021 முதல் ஹெய்டி கடும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ளது. ஆயுதக் கும்பல்கள் நாட்டின் பெரும் பகுதியை கட்டுப்படுத்தி வருகின்றன.