இதை மட்டும் செய்யுங்க.. நோபல் பரிசு கிடைக்கும் ; டிரம்பிற்கு ஐடியா கொடுத்த பிரான்ஸ் அதிபர்!
எப்படியாவது அமைதிக்கான நோபல் பரிசை வாங்கி விட வேண்டுமென்ற சமாதான புறாவாக மாறியுள்ள ட்ரம்பிற்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரான் சில ஐடியாக்களை வழங்கியுள்ளார் .
அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் தான் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், அதனால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என்றும் தனது ஆசையை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார் .
இஸ்ரேல் - காசா போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்
பாகிஸ்தானும் ஏற்கனவே ட்ரம்ப்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் ட்ரம்ப் நோபல் பரிசு பெற என்ன செய்ய வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் பேசியுள்ளார்.
அதில் அவர் “இஸ்ரேல் - காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்தால்தான் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை பெற முடியும். இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கை செலுத்தும் நாடாக அமெரிக்கா உள்ளது.
தற்போதைய சூழலில் எதையும் செய்யக்கூடிய அரசியல் தலைவராக ட்ரம்ப் இருக்கிறார். காசாவில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளை நிறுத்த அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காசாவில் அழிவை நடத்த அனுமதிக்கும் ஆயுதங்களை நாங்கள் இஸ்ரேலுக்கு வழங்குவதில்லை. நாங்கள் செயலற்றவர்களாக இருக்கமாட்டோம். அதேசமயம் நாட்டின் நலன்களையும் காப்போம் என்றும் பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார்.