பாலஸ்தீன அரசு தொடர்பில் கனடா நிலைப்பாடு வெளியானது
எதிர்வரும் செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கனடா அறிவித்துள்ளது.
இதன்படி, அண்மைய நாட்களில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாகக் கனடா இருக்கும் என்று பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
கனடாவின் வெளியுறவுக் கொள்கை
எனினும், ஹமாஸ் இல்லாமல் அடுத்த ஆண்டு பாலஸ்தீன ஆணைக்குழு தேர்தல்களை நடத்துவது உட்பட ஜனநாயக சீர்திருத்தங்களைச் சார்ந்து, தங்களது நடவடிக்கை இருக்கும் என்று மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இஸ்ரேல் போர்நிறுத்தம் மற்றும் பிற நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரித்தானியா அறிவித்த ஒரு நாள் கழித்தும், பிரான்ஸ் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பின்னரும், கனடாவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
இதுவரைக்கும் ஐக்கிய நாடுகளின் 193 உறுப்பு நாடுகளில் கிட்டத்தட்ட 150 நாடுகள் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரித்துள்ளன.
இந்தநிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களின் விரிவாக்கம், காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை ஆகியவை கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் வியக்கத்தகு மாற்றத்திற்கான காரணங்களாக மார்க் கார்னி மேற்கோள் காட்டியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய அவர், காசாவில் மனித துன்பங்களின் அளவு தாங்க முடியாதது, அது வேகமாக மோசமடைந்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தாம் பாலஸ்தீன அதிகார சபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் கலந்துரையாடியதாகவும் கனேடிய பிரதமர் தெரிவித்துள்ளா