கனடா அரசியல்வாதிகளின் பயணங்களால் எழுந்த சர்ச்சை
சுகாதார எச்சரிக்கைகளைத் தாண்டி, பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் போன்றவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தமை குறித்து சமீப காலமாக கனடா ஊடகங்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர். இதில் உள்ளடங்குவோர் விவரம் பின்வருமாறு, Calgary-Signal Hill Conservative MP Ron Liepert, கடந்த மார்ச் மாதம் முதல் இரண்டு தடவைகள் கலிபோர்னியாவில் உள்ள Palm desert இற்கு சென்றுள்ளார்.
இவர் இதற்கு முன்பாக Alberta வின் சுகாதார மற்றும் நலன் துறை அமைச்சராக பணிபுரிந்தார்.
ஆனால் இவரது பயணம் அரசாங்க ரீதியாக தவிர்க்கமுடியாதது என அறியப்பட்டுள்ளது. இரண்டாவதாக, NDP MP Niki Ashton, குடும்ப விவகாரங்கள் தொடர்பில் கிரேக்கத்திற்கு பயணத்தை மேற்கொண்டிருந்ததைத் தொடர்ந்து பதவியிழந்துள்ளார்.
மூன்றாவதாக Alberta வின் நகராட்சி விவகார அமைச்சர் Tracy Allard விடுமுறை சுற்றுப்பயணமாக ஹவாய் தீவு சென்றுள்ளார். நான்காவது Lesser Slave lake MLA Pat Rehn சுற்றுலா பயணம் ஒன்றை மெக்சிகோவிற்கு மேற்கொண்டுள்ளார்.
Red Deer South இன் MLA Jason Stephen, அமெரிக்காவிற்கு பயணம் செய்துள்ளார். ஒன்ராறியோவின் முன்னாள் நிதி அமைச்சர் Rod Phillips விடுமுறையை கழிப்பதற்காக Carribean சென்றிருந்ததைத் தொடர்ந்து வருகையின் போது தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
மேலும் தற்சமயம் ஊடகங்களிற்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி Saskatchewan பிரதேசத்தை சேர்ந்த MLA ஒருவரும் Quebec இல் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் பயணம் செய்துள்ளமை பதிவாகியுள்ளது.