கனடிய தபால் நிறுவனத்தின் அதிரடித் தீர்மானம்
கனடிய தபால் நிறுவனம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை பணியிலிருந்து நீக்கத் தீர்மானித்துள்ளது.
தற்காலிக அடிப்படையில் இவ்வாறு பணி நிக்கப்பட உள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக கனடிய தபால் நிறுவன பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் 55000 பணியாளர்கள் இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணியாளாகளை தற்காலிக அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்படுவதாக கனடிய தபால் நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் பணிகள் முற்று முழுதாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகவும் இதனால் பணியாளர்கள் பணி நீக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராடடம் முன்னெடுக்கப்பட்டு வ ருகின்றது.
இந்த பணி நீக்கத் தீர்மானம் எவ்வாறானது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.