கனடா நிதி அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!
கனடா மந்த நிலைக்குள் நுழையும் அபாயம் அதிகரித்து வருவதாக மத்திய அரசாங்கத்தின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, பற்றாக்குறை குறைந்து செல்வதை தெளிவாக்கியுள்ளது. இதன்படி, 2022-23ஆம் ஆண்டில் பற்றாக்குறை 36.4 பில்லியன் டொலராக இருக்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் கடந்த ஏப்ரம் மாதம் வெளியிடப்பட்ட பாதீட்டு திட்டத்தில் 52.8 பில்லியன் டொலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. வரவு செலவு திட்டம் 2027-28ஆம் ஆண்டுக்குள் மீண்டும் சமநிலைக்கு திரும்பக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த இலையுதிர் கால பொருளாதார அறிக்கையை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Chrystia Freeland) வெளியிட்டார்.
2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னர், லிபரல் அரசாங்கம் சமச்சீரான வரவு செலவு திட்டத்தை முன்னறிவிப்பது இதுவே முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.