கனடாவின் புதிய குடியுரிமை சட்ட மூலம் 2026 ஜனவரியில்
கனடாவின், புதிய குடியுரிமை சட்ட மூலமான சி-3 எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
அதன்படி, கனடாவின் குடியுரிமை சட்ட, திருத்த சட்ட மூலத்துக்கு ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, சி-3 எனும் புதிய திருத்த சட்ட மூலத்தைக் கனடா முன்வைத்துள்ளது.

கனடா குடியுரிமை வாரிசுரிமை சட்டம்
அதேவேளை கடந்த 2009 ஆம் ஆண்டு கனடா குடியுரிமை வாரிசுரிமை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சட்டமூலம் கனடாவில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் ஒரு கனேடிய குடிமகனுக்கு, வெளிநாட்டில் பிறக்கும் குழந்தையின், கனடா குடியுரிமையைத் தடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து, கடந்த 2024 மே மாதம் சி-3 எனும் புதிய திருத்த சட்ட மூலத்தைக் கனடா அரசாங்கம் அறிமுகப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.