புடினை கோவப்படுத்தும் கனடா பிரதமரின் செயல்!
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau) உக்ரைனுக்கு ஆதரவை அதிகரிப்பது குறித்து ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன்(Volodymyr Zelensky) உரையாடினார்.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகி வரும் உக்ரைனுக்கு கனடா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில் கனடா மற்றும் உக்ரைன் தலைவர்கள் ரஷ்யாவின் தாக்குதல் குறித்து உரையாடியுள்ளனர்.
வலுவான ஒற்றுமையை பேணுவதன் முக்கியத்துவம் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோயும்(Justin Trudeau), உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும்(Volodymyr Zelensky) பேசினர்.
மேலும் அவர்களது உரையாடலில், ரஷ்யாவின் சட்டவிரோத மற்றும் நியாப்படுத்த முடியாத ஆக்கிரமிப்பின் பரந்த உலகளாவிய தாக்கங்களை நிவர்த்தி செய்யவும், கனடாவின் தொடர்ச்சியான உதவியை பெறவும் ஒத்த சிந்தனையுடன் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
அத்துடன் உக்ரைனின் சமீபத்திய ராணுவ ஆதாயங்களை வரவேற்ற ட்ரூடோ(Justin Trudeau), ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின்(Volodymyr Zelensky) தலைமைத்துவம் மற்றும் ஜனநாயக விழுமியங்களையும் பாராட்டினார்.
தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தின் நிலைமை குறித்தும் கவலை தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ(Justin Trudeau), கனடாவின் வலுவான ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.
அதேபோல் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky) , ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராக தங்கள் நாட்டையும், சுதந்திரத்தையும் பாதுகாக்க உக்ரேனிய மக்களின் தைரியத்தை அவர் எடுத்துரைத்ததுடன் கனடாவின் ராணுவ உதவி, மனிதாபிமானம் மற்றும் உக்ரைனுக்கான அபிவிருத்தி உதவிகளுக்காக ட்ரூடோவுக்கு(Justin Trudeau) நன்றி தெரிவித்தார்.
உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவின் மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வரவிருக்கும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை உட்பட மற்ற தலைவர்களை தொடர்ந்து ஈடுபடவும், அணி திரட்டவும் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.