ரஸ்ய பிரஜைகள் மீது மேலும் தடை விதிக்கும் கனடா
கனடிய அரசாங்கம் மேலும் ரஸ்ய பிரஜைகள் மீது தடை விதித்துள்ளது.
கனடிய புலனாய்வுப் பிரிவு, சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் பிரிவு என்பனவற்றைச் சேர்ந்த 13 ரஸ்யப் பிரஜைகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ரஸ்யாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை மற்றும் நஞ்சூட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அலெக்ஸியின் மனைவி ஜூலியா தற்பொழுது கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் கனடிய அரசாங்கம், ரஸ்ய பிரஜைகள் சிலருக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி தடை குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.