ஈரான் மீது மேலும் தடைகளை அறிவித்த கனடா
ஈரான் மீது மேலும் தடைகளை விதிப்பதாக கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஈரானிய பாதுகாப்பு பிரதானி உள்ளிட்ட சிலர் மீது இவ்வாறு கனடா தடை விதித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாகவும் உக்ரைன் போர் தொடர்பிலும் ஈரான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈரானிய தேசிய பாதுகாப்பு பேரவையின் பிரதானி அலி அக்பர் அஹமடின் மீது தடை விதிப்பதாக கனடா அறிவித்துள்ளது.
ஈரானிய ட்ரோன் துறைசார் சிலருக்கு எதிராகவும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கத்தினால் இதுவரையில் 13 தடவைகள் ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை விதிக்கப்பட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க முடியாது.
மேலும் அவர்களமு சொத்துக்கள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.