கனடாவில் சீரற்ற காலநிலையினால் தொடர்ந்தும் பாதிப்பு
கனடாவில் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக இவ்வாறு மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பியர்சன் சர்வதேச விமான நிலையம் விமான பயணங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில சந்தர்ப்பங்களில் விமான பயணங்கள் காலம் தாழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பியர்சன் விமான நிலைய நிர்வாகம் இது தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவுகளை இட்டுள்ளது.
குறித்த விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் 12 முதல் 15 சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனிப்பொழிவு காரணமாக சில இடங்களில் வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்றினால் நாட்டின் சில பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான குளிருடனான காலநிலையினால் சிலர் நோய் வாய்ப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.