சீனா மீதான வரிகளை குறைக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை
சீனா மீதான வரிகளை குறைக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சஸ்காட்சுவான் முதலமைச்சர் ஸ்காட் மோ இந்தக் கோரிக்கையை சீன அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார்.
மோ, அடுத்த வாரம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கனடா அரசு பெய்ஜிங்கிற்கு விதித்துள்ள 100 சதவீத மின்சார வாகன (EV) வரியை நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய நிபந்தனை
ஆனால், கனடா அமெரிக்க ஐக்கிய நாடுகளுடன் நல்ல உறவை பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற முக்கியமான நிபந்தனையை அவர் சுட்டிக்காட்டினார்.
மின்சார வாகன வரியை நீக்குவதற்கு ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக செலவுகளை சமநிலைப்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். ஏனெனில் எங்கள் மிகப்பெரிய கனோலா சந்தை இன்னும் அமெரிக்காவாகவே உள்ளது மோ கூறியுள்ளார்.
சீனா கனேடிய கனோலா விதைகளுக்கு 76 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இது கனடாவின் மற்றும் சஸ்காட்சுவானின் மிக மதிப்புமிக்க பயிர்களில் ஒன்றின் மதிப்பை மில்லியன் கணக்கில் குறைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கனடாவின் 100 சதவீத மின்சார வாகன வரிக்கு பதிலடியாக சீனா கனோலா விதைகள் மீது வரி விதித்ததாக கருதப்படுகிறது. மேலும், கனோலா எண்ணெய் மற்றும் உணவு தயாரிப்புகளுக்கு 100 சதவீத வரியையும் சீனா விதித்துள்ளது.
கனடா, உள்நாட்டு முதலீடுகளை பாதுகாக்கும் வகையில் மின்சார வாகனங்களுக்கு வரி விதித்ததாக நியாயப்படுத்தியுள்ளது.
கனோலா தொழில் கடந்த ஆண்டு கனடாவின் பொருளாதாரத்தில் 43 பில்லியன் டாலர்களை பங்களித்து, 200,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கியது.