கனடாவுக்கு தற்காலிகமாக குடியேற காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்
வெளிநாடுகளிலிருந்து வரும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை குறைப்பதற்கு கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதற் கட்டமாக அடுத்த ஆண்டில், 385,000 பேருக்கே கனடாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு தற்காலிக குடியிருப்பு அந்தஸ்துகளே வழங்கப்படவுள்ளன.

நிரந்த வதிவிடம்
கனடாவில் ஏற்கனவே குடிபுகுந்துள்ள தற்காலிக குடியிருப்பாளர்களுக்கு நிரந்த வதிவிடம் வழங்கும் நோக்குடனே,புதிதாக வருவோரின் தொகையை மட்டுப்படுத்த கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது கடந்த சில ஆண்டுகளில் காணப்பட்ட அதிக எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவுகுறைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நிரந்தர வதிவிட வசதிகள் வழங்கப்பட்ட பின்னர்,எதிர்காலத்தில் கனடாவின் குடியேற்ற கொள்கையில் இறுக்கமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவுள்ளன.
கனடாவில் சர்வதேச மாணவர்களின் வருகை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 60 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2024 ஆண்டு புகலிடக் கோரிக்கைகளுக்காக விண்ணப்பித்தோர் தொகை, இவ்வாண்டில் மூன்றிலொரு பங்காக குறைந்துள்ளது.
இவ்வாறுள்ள நிலையில்,எதிர்வரும் மூன்றாண்டுகளில் 380,000 வௌிநாட்டினர்களுக்கு நிரந்தரவதிவிடங்களை வழங்க கனடா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.