அமெரிக்கப் பயணம் தொடர்பில் கனேடியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

United States of America Canada
By Balamanuvelan Aug 01, 2026 06:59 AM GMT
Report

அமெரிக்க மாகாணமொன்றிற்குப் பயணிக்கும் கனேடியர்களுக்கு கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்கள்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சைக்ளோஸ்போரியாசிஸ் என்னும் ஒட்டுண்ணித் தொற்று பயங்கரமாக பரவி வருகிறது.

ஜுலை 30 வரையிலான காலகட்டத்தில், மிச்சிகன் மாகாணத்தில், 10,700க்கும் அதிகமானவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்கப் பயணம் தொடர்பில் கனேடியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி | Canada Travel Advisory To Us Over Cyclosporiasis

சைக்ளோஸ்போரியாசிஸ் கிருமித் தொற்றை ஏற்படுத்தக்கூடியது சைக்ளோஸ்போரா என்னும் கிருமி ஆகும்.

உணவு மற்றும் குடிநீர் வழியாக மட்டுமே பரவும் இந்த சைக்ளோஸ்போரா என்னும் கிருமி, வயிற்றுப்போக்கு, வயிறு வீக்கம், வயிற்று வலி, லேசான காய்ச்சல், வாயுத்தொல்லை மற்றும் பசியின்மையை ஏற்படுத்தும்.

பல நாட்கள் அல்லது வாரங்களுக்கு நீடிக்கும் இந்த பிரச்சினைகள், முறையாக, முழுமையாக சிகிச்சை பெறாவிட்டால் மீண்டும் உருவாகும்.

விடயம் என்னவென்றால், மிச்சிகனை ஒட்டியுள்ள கனேடிய பகுதி வின்ஸ்டர் எசெக்ஸ்.

வின்ஸ்டர் எசெக்ஸிலிருந்து மக்கள் எல்லை கடந்து மிச்சிகனுக்குச் சென்றுவருவதுண்டு.

இந்நிலையில், பொதுவாக வின்ஸ்டர் எசெக்ஸில் அதிகபட்சமாக மூன்று பேருக்கு சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று கண்டறியப்படும் நிலையில், தற்போது வழக்கத்துக்கு மாறாக 24 பேருக்கு அந்த ஒட்டுண்ணித் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்கப் பயணம் தொடர்பில் கனேடியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி | Canada Travel Advisory To Us Over Cyclosporiasis

ஆக, அமெரிக்காவுக்கு, அதாவது, மிச்சிகனுக்கு கனேடியர்கள் சென்று வருவதால், அவர்களுக்கு இந்த சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவியிருக்கலாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.

ஆகவே, எல்லை கடந்து மிச்சிகனுக்குப் பயணிக்கும் கனேடியர்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுமாறும், லெட்டூஸ், சாலட் போன்ற உணவுகள் மூலமாக சைக்ளோஸ்போரியாசிஸ் தொற்று பரவுவதாக கருதப்படுவதால், அத்தகைய உணவுகளை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறும் கனடா சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US