கனடாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்களின் சுவாரஸ்ய சம்பவம்
கனடாவில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பாடி நடனமாடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கனடாவில் தற்போது காட்டுத் தீ தீவிரமடைந்துள்ள நிலையில் அதனை அணைக்க வரவழைக்கப்பட்ட தென்னாப்பிரிக்க தீயணைப்பு வீரர்கள் ஆடியும் பாடியும் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளும் வீடியோ உலகளவில் பேசப்படும் ஒரு சுவாரஸ்ய சம்பவமாக பதிவாகியுள்ளது.
கனடாவில் பரவிவரும் காட்டுத் தீ, உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
காட்டுத் தீயை விரைவாகக் கட்டுப்படுத்த தென்னாப்பிரிக்காவில் இருந்து 200 வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
#2023WoFCanadianDeployment
— Working on Fire (@wo_fire) June 4, 2023
Song and dance from #MZANZI1 as they arrive in Edmonton, Canada.#MZANZI1@environmentza@CIFFC@epwpza@kishugu pic.twitter.com/alj2IEnkuJ
கனடாவில் எட்மண்டன் நகருக்கு வந்த தென்னாப்பிரிக்கா வீரர்கள், தங்கள் உடைமைகளுடன் விமான நிலையத்தில் நடனமாடினர்.
இதேவேளை, தங்களை உற்சாகப்படுத்தும் விதமாக, தீயணைப்புத் துறையில் நுழைவதற்கு முன்பு தங்கள் மகிழ்ச்சியைக் காட்ட தென்னாப்பிரிக்கக் கொடிகளை ஏந்தியபடி பாரம்பரிய நடனம் ஆடினர் என்பது குறிப்பிடத்தக்கது.