அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதித்த கனடா
அமெரிக்காவில் இருந்து கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் கனடா மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதி வரிக்கு பதிலடியாக இவ்வாறு கனடாவும் வரி விதிப்பை அறிவித்துள்ளது.
குறிப்பாக உணவுப் பொருட்கள், பான வகைகள் தளபாடங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவற்றுக்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த அறிவிப்பினை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 30 பில்லியன் டாலர் பெறுமதியான பொருட்களுக்கு கனடா வரி விதிக்க உள்ளது. சுமார் 25 வீதம் அளவில் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உற்பத்திகள் பலவற்றின் மீது இவ்வாறு வரி விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.