காணாமல் போன சிறுவனை 3 மாதங்களாக தேடும் அதிகாரிகள்
கனடாவில் காாணமல் போன சிறுவன் ஒருவனை பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக தேடி வருகின்றனர்.
கனடாவின் எட்மன்டனில் மூன்று மாதங்களாக 14 வயது இளைஞர் சாமுவேல் பேர்டை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அக்வா ஐ Aqua Eye எனப்படும் சிறப்பு சோனார் கருவியை பயன்படுத்தி North Saskatchewan ஆற்றில் தேடுதல் பணிகளை அதிகாரிகள், மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கருவி ஒரே நேரத்தில் ஐந்து கால்பந்து மைதானங்களுக்கு இணையான பரப்பளவை ஸ்கேன் செய்யும் திறன் கொண்டது.
இந்த உதவி எனக்கு மிகப் பெரிய அர்த்தம் உடையது எனவும் என் மகனை கண்டுபிடிப்பதற்கான ஒரு படி அருகில் சென்றதுபோல் உணர்கிறேன் எனவும் சாமுவேலின் தாய் அலானா, “தெரிவித்துள்ளார்.
சாமுவேல் பேர்ட் கடந்த ஜூன் 1, 2025 முதல் காணாமல் போயுள்ளார். சிறுவன் காணாமல் விவகாரம் சந்தேகத்திற்குரியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுவன் பற்றிய விபரங்கள் கிடைத்தால் வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.