ஈராக்கில் கனேடிய படைவீரர் பலி
ஈராக்கில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கனேடிய படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
படைசார் விடயங்களுக்கு அப்பாலான காரணங்களினால் குறித்த படைவீரர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய இராணுவப் படையைச் சேர்ந்த கெப்டன் எரிக் சுங் என்ற படை அதிகாரியே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இவர், கனேடிய இராணுவத்தின் வின்னிப்பிக் 38ம் படைப்பிரிவின் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மரணம் தொடர்பில் கனேடிய பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கனேடிய இராணுவப் படையினர் ஆகியோர் விசாரணகைளை முன்னெடுத்து வருகின்றனர்.
எரிக் சுங்கின் மரணம் தொடர்பில் அவரது குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிடுவதாக கனேடிய படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த படை அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.